திருவண்ணாமலையில் கிரிவலம் பாதையில் மிகவும் பிரபலமானவர் தொப்பி அம்மா. இவரைப் பற்றி பேசாத ஆட்கள் யாரும் இல்லை திருவண்ணாமலையில்.
தொப்பி அம்மா என பெயர் வர காரணம்?
தலையில் எப்போதும் தொப்பி அணிந்து இருப்பதால் இவரை தொப்பி அம்மா என்று அழைப்பார்கள்.
ஆடை முழுவதும் எச்சில் ஊறி தலை வாராமல் செம்பருத்தி பூவை வைத்துக் கொண்டு திருவண்ணாமலை கிரிவல பாதையையே சுத்தி வரும் தொப்பி அம்மா யார்?
தொப்பி அம்மாவை சித்தராக மதித்து அவரது காலடி தடம் பட்ட மண்ணை தொட்டு கும்பிடுவதும், அவரது காலில் விழுவதும், அவர் சாப்பிட்டு வைத்த மிச்ச உணவை அமிர்தமாக எடுத்து சாப்பிடுவதும் மக்கள் வழக்கம் ஆகிவிட்டது.
தொப்பி அம்மா யார் எந்த பொருள் கொடுத்தாலும் வாங்கி சாப்பிட மாட்டார். யாரிடம் வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அவரிடம் மட்டுமே வாங்கி சாப்பிடுவார்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் வாழும் பெண் சித்தராக தொப்பியம்மா மதிக்கப்படுகிறார்.
